தமிழை காணவில்லை – கேள்வியெழுப்பும் சிங்கள ஊடகவியலாளர் & மனோ MP

நேற்று 72 ஆவது இராணுவ கொண்டாட்டங்கள் அனுராதபுரம், சாலியவெவ கஜபாகு ரெஜிமென்ட் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்சவினால் அங்கே மைதானம் ஒன்று அவரின் பெயரிலேயே திறந்து வைக்கப்பட்டது.

அந்த பெயர் பலகையில் தமிழ் மொழி பொறிக்கப்படவில்லை. மாறாக அரச கரும மொழியான சிங்களமும், இணைப்பு மொழியான ஆங்கிலமும் பொறிக்கப்பட்டிருந்தன. இலங்கையின் அரச கரும மொழிகள் சிங்களம் மற்றும் தமிழும் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில், நேற்றைய தினம் முன்நாள் அரச கரும மொழிகள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்

“விளையாட்டரங்கமாக இருக்கலாம்! விளையாட்டாகவே இருக்கலாம்! அன்னை இலங்கையின் பேரில், முதல் பிரஜை, அரசியலமைப்பின் மொழிக்கொள்கையை பின்பற்றனும். அடுத்த மூன்று வருடங்களில்
செய்யப்போகும் “பிழைதிருத்தங்களில்” மொழிகொள்கையை பின்பற்றுவதும் ஒன்றாய் இருக்க பிரார்த்திக்கிறேன்”
என தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ஏன் இந்த பெயர் பலகையில் தமிழ் மொழி நீக்கப்பட்டுளள்து என கேள்வியெழுப்பி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழை காணவில்லை - கேள்வியெழுப்பும் சிங்கள ஊடகவியலாளர் & மனோ MP
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version