நாட்டில் அதிகமானோருக்கு விட்டமின் D குறைபாடு!

நாட்டின் சனத்தொகையில் 25 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது சற்று ஆபத்தான சூழ்நிலையை உருவாக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விட்டமின் D குறைபாட்டைக் குறைக்க முடிந்தவரை சூரிய ஒளியில் இருப்பது முக்கியம் எனவும், ஆனால் அதிக சூரிய ஒளியில் இருக்கக் கூடாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் விட்டமின் D குறைபாடு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் சில மாதங்களுக்கு ஒருமுறை வைட்டமின் குறைபாடு குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version