உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்கள் மீண்டும் கடமைக்கு திரும்ப அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேர்தலில் அரச ஊழியர்கள் போட்டியிடுவதாக இருந்தால் அவர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டே போட்டியிட வேண்டும்.
தேர்தல் மார்ச் மாதத்தில் நடாத்தப்படுவதாக இருந்தது. இருப்பினும் நாட்டின் சூழ்நிலை காரணமாக போதியளவு பணம் இன்மையினால் குறித்த நேரத்தில் தேர்தலை நடாத்த முடியாமல் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டது. இவ்வாறான நிலையில் அரச ஊழியர்கள் வேலையின்றி காணப்படுவதனால் அவர்கள் மீண்டும் பணிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை முடிவு தேர்தல் இப்போதைக்கு நடைபெறப்போவதில்லை என்பதனை உறுதி செய்துள்ளது.