யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுக்கபட தீர்மானிக்கபட்டிருந்தது.
எனினும், காங்கேசன்துறையிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இம்மாதம் நடுப்பகுதியில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் பயணத்தின் ஒரு வழி போக்குவரத்திற்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுமெனவும் 65 கடல் மைல் தூரம் கொண்ட இந்த பயணத்திற்கு சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
மேலும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணிக்கு காரைக்காலில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்த கப்பல் நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளதுடன், மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு காரைக்கால் நோக்கி பயணத்தை ஆரம்பித்து மாலை 6 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.