இந்திய வெளியுறவு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையில் இன்று(03.05) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு மற்றும் இலங்கையின் பொருளாதாராத்தை ஸ்திரப்படுத்தும் நோக்குடனும் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தென்கொரியா சீயோல் நகரில் இடம்பெற்றுவரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்த கூட்டத்தின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 4000 இற்கும் அண்மித்தவர்கள் பங்குபற்றியுள்ளனர். ஆசிய நாடுகளின் அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் இந்த கூட்ட தொடரில் பங்குபற்றியுள்ளனர்.
இலங்கையின் மோசமான காலத்தில் இலங்கைக்கு கைகொடுத்தமைக்கும், தொடர்ந்தும் நேர்தன்மையான ஆதரவு வழங்கி வருகின்றமைக்கும் இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கம் சார்பாக இந்தியாவுக்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி நாளை(04.03) ஆளுநர்களின் வர்த்தக அமர்வில் உரையாற்றவுள்ளார். இந்த கூட்ட தொடரில் வெளிநாட்டு வளத்துறை பணிப்பாளர் நாயகம் அஜித் அபேயசேகர வெளியுறவு அமைச்சருடன் கலந்துகொண்டுள்ளார்.