நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க இன்று (04.05) பிரித்தானியா சென்றதை அடுத்து அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பும் வரை இலங்கையின் பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் நேற்று (03.05) உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே 6ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு பயணப்பட்டுள்ளார்.
முடிசூட்டு விழாவிற்கு முன்னதாக, அதாவது மே 5ம் திகதி வெள்ளியன்று பொதுநலவாய நாடுகளின் ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கான உச்சி மாநாட்டை நடத்துவதற்கும், தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.