நுவரெலியாவில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவை அதிகாரசபையின் அதிகாரிகளினால் குறித்த சந்தேகநபர்கள் நேற்று (03.05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர்கள் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், மூவருக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் படி மூன்று இலட்சம் ருபாய் அபராதம் செலுத்த நுவரெலியா நீதவான் சஞ்சீவ நாலக விரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நுவரெலியா எல்லைக்குட்பட்ட பல முக்கிய நகரங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் விலை குறிப்பிடாமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 16 சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply