ஊடகத்தில் தங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை – திலீபன் எம்பி

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதி மறுத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஊடகத்தில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என்று பதிலளித்துள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று(03.05) மாலை இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அபிவிருத்தி இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனிடம் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பதில் அழித்த அவர்…..

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மக்களுக்கு எதிரான சட்டவிரோதமான தீர்மானம் எதனையும் எடுத்தீர்களா, என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது கிளிநொச்சி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களை உள்வாங்கி இருக்கின்றனர். எனவே அடுத்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நாங்கள் உங்களை உள்வாங்குவோம். என்றார்.

எம்மை உள்ளே அனுமதிக்காமைக்கு விசேட காரணங்கள் உள்ளனவா என்று கேட்டதற்கு.. அரசாங்க அதிபர் சுற்று நிருபம் என்று சொல்கிறார் நாம் என்ன செய்வது. என்று பதில் அழித்திருந்தார்.
எனினும் இணைத்தலைவர் பரிந்துரைசெய்தால் அனுமதி வழங்கலாம் என சுற்று நிருபத்தில் உள்ளதே என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அழித்த அவர் ஊடகங்களில் தங்கியிருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று பொறுப்பில்லாமல் பதில் அழித்திருந்தார். எனினும் மக்கள் உண்மையினை அறிந்துகொள்ள ஊடகங்களை தானே நம்பியிருக்கின்றார்கள் என்று ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது, அதற்கு பதில் அழித்த அவர் அடுத்த கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.

நாங்கள் வருகைதந்த போது மண்டப கதவினை மூடி ஒலிபெருக்கியின் சத்தத்தினையும் குறைக்கவேண்டிய தேவை ஏன் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் வழமையாகவே இந்த மண்டபத்தின் கதவு மூடித்தான் இருக்கும். உங்களுக்காக மூடவில்லை என்றார்.

உங்களை மீறி அரச அதிபர் செயற்படுகின்றாரா என கேட்டதற்கு திணைக்கள அதிகாரிகளையும் உங்களையும், அழைக்கும் பொறுப்பு அரச அதிபருக்கே உரியது என்று பதில் அழித்திருந்தார்.

Social Share

Leave a Reply