பொரளை வெஸ்டேர்ன் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெஸ்டேர்ன் வைத்தியசாலை தலைவர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரிப் இனால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக மேலதிக சொலிலிஸ்டர் நாயகம் விக்கும் டி அப்ரேவ் முன்னிலையாகியிருந்தார்.