பிரமித ராணுவப்பொறுப்பு! செஹான் நிதிப்பொறுப்பு!, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) இருந்த இந்த இளைஞர்கள், முன்பு மஹிந்த கட்டுப்பாட்டில் தேசிய உடை (national dress) போட்டவர்கள். இப்போ ரணில் கட்டுப்பாட்டில் கோர்ட் சூட் போடுகிறார்கள். இங்கிலிஷ் பேசும் சர்வதேச பாடசலையில் (international school) படித்த இவர்கள் சுலபமாக ரணிலுடன் ஒட்டிக்கொண்டார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“இதில் இன்று ரொம்ப கடுப்பு, நாமல் ராஜபக்சவுக்குதான். ஏனெனில் இவர்களெல்லாம், முன்பு நாமலின் நண்பர்கள்” என கூறியுள்ள மனோ கணேசன், ரணில் தனது ஜனாதிபதி தேர்தல் பிரசார வியூகங்களை ஆரம்பித்து விட்டார் எனகூறியுள்ளார்.
“ரணில் ராஜபக்ச என கிறுக்குதனமாக கூச்சல் போட்ட ஹிரூனிகாவே துண்டை துணியை காணோம் என மூலைமுடுக்கீல் கப்சீப்பாக ஒளிந்து இருக்கிறார்.
இவ்வளவு ஆகியும், நம்ம தமிழ் எம்பீக்கள் உட்பட பலர், ரணில், ராஜபக்சர்களை காப்பாற்றத்தான் பிரதமர், ஜனாதிபதி பதவிகளை ஏற்றார் என்ற பழைய பல்லவியையே பாடுகிறார்கள். நான்தான் எப்போதும் ஒன்றை திரும்ப திரும்ப சொன்னேன். ரணில் யாரையும் காக்க போகவில்லை. அவர் தன்னை தானே காப்பாற்றிக்கொள்ளத்தான் போனார்” என தெரிவித்துள்ளார்.
“2005ம் வருடம் சதி காரணமாக பறிபோன ஜனாதிபதி பதவியை தேடிப்பெற்றார். ஆகவே, ரணிலை எதிர்ப்பதானால் அவரை ரணிலாகவே நினைத்து எதிர்க்க வேண்டும்” எனவும் மனோ MP கூறியுள்ளார்