இலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகத்துக்கு பங்களாதேஷ் மகளிர் அணி நேற்று(04.05) விஜயம் செய்துள்ளது. கொழும்பு SSC மைதானத்தில் அமைந்துள்ள இலங்கை கிரிக்கெட் தலைமையகத்துக்கு அருகாமையில் இந்த கிரிக்கெட் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம், 2014 ஆம் ஆண்டு T20 உலக கிண்ணம் மற்றும் ஆசிய கிண்ணங்கள் அடங்கலாக பல முக்கிய கிண்ணங்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் கிண்ணங்கள் அடங்கலாக பல விடயங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் சென்று பார்வையிட முடியும். திங்கட்கிழமை முதல், ஞாயிற்றுக்கிழமை வரை காலை 09 மணி முதல் மலை 05 மணி வரை பாரவையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.