ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று (05.05) 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன், இந்த நிலநடுக்கம் காரணமாக, பிரபலமான சுற்றுலா தளமான நாகானோ மற்றும் கனாசாவா இடையே ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
மேலும் நிலநடுக்கத்தினால் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், சில கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.