மறைந்த தொழிலதிபர் டினேஷ் சாப்டரின் மடி கணினி தொடர்பில் ஆராய்ந்து முழுமையான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்துக்கும் குடும்பத்துக்கும் சமர்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார். நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு இந்த அறிக்கை கைகொடுக்கும் என நம்பப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்மொழியப்பட்ட இந்த விடயம் தொடர்பில் பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்மொழிவை செய்துள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே மாதம் 08 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
டினேஷ் சாப்டரின் மரணத்துக்கான உண்மையான காரணம் தொடர்பில் விசாரணை செய்ய பேராசிரியர் அசேல மென்டிஸ், பேராசிரியர் D.C.R. பெரேரா, பேராசிரியர் D.N.P பெர்னாண்டோ, வைத்தியர் சிவா சுப்ரமணியம், வைத்தியர் ரொஹான் ருவன்புர ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அவர்கள் விசாரணைகளை செய்து வருகின்றனர்.