குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (05.05) ஜெய்ப்பூரில் IPL இன் 48 ஆவது போட்டியாக நடைபெற்றது. குஜராத் அணி தங்களது ஆக்ரோஷமான பந்துவீச்சினாலும், அபாரமான துடுப்பாட்டத்தினாலும் இந்த வெற்றியினை பெற்றுக்கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. இதில் சஞ்சு சாம்சன் 30(20) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ரஷீத் கான் 3 விக்கெட்களையும், நூர் அஹமட் 2 விக்கெட்களையும், மொஹமட் ஷமி, ஹார்டிக் பாண்ட்யா, ஜோஷ் லிட்டில் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய குஜராத் அணி 13.5 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 119 ஓட்டங்களை பெற்றது. இதில் விரிந்திமன் சாஹா ஆட்டமிழக்காமல் 41(34) ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்ட்யா, ஆட்டமிழக்காமல் 39(15) ஓட்டங்களையும், ஷுப்மன் கில் 36(35) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் யுசுவேந்திர சஹால் 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.