களவாஞ்சிகுடி, வேம்பு வீதி, மாங்காடு பகுதியில் நேற்று (07.05) 74 வயதுடைய பெண் ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் சுகவீனம் காரணமாக நடக்க முடியாமல் படுக்கையில் இருப்பதாகவும், படுக்கைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த புகை சுருள் பற்றி எரிந்ததால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவருடைய சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.