இந்திய இனக்கலவரத்தில் 50 பேருக்கு மேல் பலி

இந்தியா, மணிப்பூர் மாநிலத்தின் ஒரு பகுதியில் நடைபெற்று வரும் சாதிக்கலவரத்தில் 50 இற்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாக இந்தியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக இந்த மோதல் இடம்பெற்றுவதாகவும், 260 பேர் இதுவரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குக்கி இனத்தவருக்கும், மெய்டெய் இனத்தவருக்கும் இடையில் இந்த மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த மோதல்களில் 23,000 பேருக்கு அதிமானவர்கள் இடம்பெயர்ந்து இராணுவ முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக இந்தியா இராணுவம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் அதிகமானவர்கள் துப்பாக்கி சூடு மூலமாகவே இறந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை காயமடைந்தவர்களில் அதிகமானவர்கள் துப்பாக்கி சூடு, மற்றும் இலத்தி தாக்குதல்கள் மூலமாக காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளன.

குறித்த மோதல் இடமபெற்று வரும் பகுதியில் வீடுகள், வாகனங்கள் தீ மூட்டப்பட்டு எரிவது, கரும் புகை மண்டலங்களாக காட்சி அழிப்பது போன்ற பல வீடிய காட்சிகள் வெளியாகி வருகின்றன.

நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவத்தின் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version