பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்!

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவிற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08.05) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

முடிசூட்டு விழாவில் ஏனைய நாட்டுத் தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் கலந்து சிறப்பித்திருந்தனர்.

முடிசூட்டு விழாவிற்கு முன்னதாக, லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் ஒன்றுகூடலிலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.

அந்தச் சந்திப்பில், நாடுகளின் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் பொதுநலவாய உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொதுநலவாய நாடுகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று ஜனாதிபதி தம் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கானா ஜனாதிபதியுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற ‘Fireside Chat’ நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.

இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதி விக்கிரமசிங்க கானா குடியரசின் ஜனாதிபதி Nana Addo Dankwa Akufo-Addo உடன் இருதரப்பு சந்திப்பும் இடப்பெற்றிருந்தது விசேட அம்சமாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version