களுத்துறையில், 16 வயதான பெண் ஒருவரின் சடலம் நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த (06.05) களுத்துறை பிரதான வீதியில் விடுதி ஒன்றுக்கு பின் புறமாக ரயில் பாதைக்கு அருகில் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணும், ஒரு ஆணும், அவர்கள் பயணித்த வாகனத்தை ஓட்டிச்சென்ற ஆணும் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மே 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உயிரிழந்த பெண்ணுடன் அறையில் இருந்த பிரதான சந்தேகநபராகிய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
29 வயதுடைய வர்த்தகரான குறித்த நபர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமானவர் எனவும், உயிரிழந்த 16 வயதுடைய சிறுமியுடன் கடந்த இரண்டு மாதங்களாக நெருங்கிய தொடர்பினை பேணி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவத்திற்கான காரணம் மற்றும் இது கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.