டுவிட்டரில் அறிமுகமாகும் புதிய வசதி!

எலான் மஸ்க் ட்விட்டரை விலைக்கு வாங்கியதை தொடர்ந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார்.

ட்விட்டரில் விரைவில் வொய்ஸ் – மற்றும் வீடியோ அழைப்பு வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டடொலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை கையகப்படுத்தியதையடுத்து, கடந்தாண்டு ஒக்டோபா் மாதம் அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றாா்.

இதைத் தொடா்ந்து ட்விட்டர் தளத்திலும், ட்விட்டர் நிறுவனத்திலும் பல மாற்றங்களை அவர் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய குரல் அழைப்பு மற்றும் காணொளி அழைப்பு (விடியோ கோல்) வசதி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version