தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை (11.05) முதல் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கரவண்டிகள் மின்சார முச்சக்கரவண்டிகளாக மாற்றப்பட உள்ளன.
இந்த வேலைத்திட்டத்தை இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்த முடியுமானால், எரிபொருள் பிரச்சினை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு நிரந்தர மற்றும் பயனுள்ள தீர்வாக அமையும் என்பதுடன், மேலும், எரிபொருளில் இயங்கும் முச்சக்கரவண்டியை விட ஒரு கிலோமீட்டருக்கு மின்சார முச்சக்கரவண்டிக்கான செலவு குறைவு என்பதால் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கும் இது விசேட நிவாரணமாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய வேலைத்திட்டம் வெற்றியடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.