இலங்கை கல்வி முறைமை மாற்றம் செய்யப்படவேண்டியது அவசியமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந் இங்கிலாந்தில் நடைபெற்ற கல்வி உலக அமைப்பின் 2023 கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உலக வங்கியின் கல்விக்கான சர்வதேச பணிப்பளார் ஜெய்மி சவீற்றாவுடன் விரிவாக கல்வி அமைச்சர் கலந்துரையாடியுள்ளார். சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் நவீன கல்வி முறைமை மற்றும் அதனை இலங்கையில் நடைமுறைப்படுத்துதல் போன்ற விடயங்களும் பேசப்பட்டுள்ளன.
இலங்கையில் கற்றல் முறைமையினை விரிவுபடுத்தும் போது எதிர்கொள்ளவேண்டிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் அமைச்சர் சுசில் பிரேமஜயந் விளக்கமளித்துள்ளார்.