சர்வதேச நாணய நிதியம் இலங்கையில்

சர்வதேச நாணய நிதிய குழுவினர் இன்று இலங்கை வருகை தரவுள்ளனர். இன்று முதல் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை நடத்தவுள்ளனர். இது ஓரு வழமையான ஆலோசனை செயற்பாட்டு திட்டமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள முதலாவது மீளாய்வு கூட்டத்துக்கு முன்னரான IMF இன் சுற்றுலா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் சர்வ்தேச நாணய நிதியத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் கலந்துகொள்கிறார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வழங்கும் திட்டத்தின் முதலாவது பகுதி தொகை மட்டுமே இலங்கைக்கு கிடைத்துள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே மிகுதி பணம் இலங்கைக்கு வழங்கப்படுமென கருதப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையில்

Social Share

Leave a Reply