அம்பானி நிறுவனத்துடன் இணையும் முரளியின் நிறுவனம்!

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் புதிய திட்டமொன்றிக்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய குளிர்பான சந்தையில் அதிகபட்ச பங்கை கைப்பற்றும் நோக்கத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது மற்றும் பெப்சி மற்றும் கோகோ கோலா போன்ற பெரிய நிறுவனங்களுக்கு வலுவான போட்டியாளர்களாக வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சிலோன் பெவரேஜ் நிறுவனம் கேன்களில் குளிர்பானத்தை பேக்கிங் செய்யும் வேலையைச் செய்யும் எனவும், சிலோன் பீவரேஜஸ் நிறுவனம் எதிர்காலத்தில் பேக்கிங் வேலைக்காக பேக்கேஜிங் நிறுவனமொன்றை இந்தியாவில் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த பேக்கேஜிங் நிறுவனம் ஆரம்பிக்கப்படும் வரை சிலோன் பெவரேஜஸின் இலங்கை தொழிற்சாலையில் இருந்து டின்னில் அடைக்கப்படு குளிர்பானம் ஏற்றுமதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒரு பிரிவான ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள், ரிலையன்ஸின் கேம்பா குளிர்பானங்கள் வரிசையின் உற்பத்தி மற்றும் விநியோகக் கூட்டாண்மைக்காக சென்னையை தளமாகக் கொண்ட நிறுவனமான காளி ஏரேட்டட் வாட்டர் ஒர்க்ஸுடன் முன்பு இணைந்துள்ளது.

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் இந்தியா முழுவதும் தனித்து புதிய குளிர்பானத்தை அறிமுகப்படுத்த உள்ளதுடன், மேலும் சமீபத்திய ஒப்பந்தங்கலை கொண்டு நாடு முழுவதிலும் அதன் கிளைகளை பரப்ப திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version