பேருந்துகளுக்கு GPS கருவிகளை பொருத்த நடவடிக்கை!

அனைத்து மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளுக்கும் GPS கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கிற்கு குறித்த திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் பேருந்துகளை நிறுத்தி வைத்து பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply