கொழும்பில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை!

கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சுற்றி இன்று (13.03) காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை எதிர்க்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், கொள்ளுப்பிட்டி சந்தியை அண்மித்த பகுதிகள் மற்றும் அலரி மாளிகையை சூழவுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக ஆயுதப் படைகள் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முதல் கொழும்பு கோட்டை இலங்கை வங்கி மாவத்தையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply