புதிய பயங்கரவாத சட்டத்தின் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு!

புதிய உத்தேச பயங்கரவாத சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நேற்று (14.05) வவுனியாவில் இடம்பெற்றது.

இதன்போது புதிதாக உருவாக்கப்படவுள்ள உத்தேச பயங்கரவாத சட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் மற்றும் அதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரம் மறுக்கப்படல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ சுமந்திரன் மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவி கோசலா மதன் ஆகியோர் கலந்து கொண்டு இவ் உத்தேச பயங்கரவாத சட்டத்தின் தன்மை அதனை அமுல்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக கருத்து தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அரசியல்வாதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

புதிய பயங்கரவாத சட்டத்தின் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version