சாதாரண தர பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்வரும் 23ம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ம் திகதி முதல் ஜூன் மாதம் 8ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள்,கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27ம் திகதி முதல் ஜூன் மாதம் 12ம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version