வவுனியாவில் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவியை அழைத்து சென்ற மர்ம நபர்!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தரம் 3 இல் கற்கும் மாணவி ஒருவரை நேற்று (15.05) திங்கட்கிழமை மர்ம நபரொருவர் அழைத்து சென்ற நிலையில் மாணவி தப்பி வந்துபோது ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பாடசாலை நேற்றைய தினம் (15.05) பாடசாலை நிறைவடைந்ததும் பெற்றொர் அழைத்து செல்ல தாமதமாகியதால் முன்பகுதியில் உள்ள இருக்கையில் தரம் 3 இல் கற்கும் மாணவி இருந்துள்ளதாகவும் இவ்வேளையில் அங்கு வந்த ஒருவர் மாணவியை அழைத்து சென்றதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் சிறிது தூரம் சென்ற மாணவி மீண்டும் பாடசாலையை நோக்கி அழுதுகொண்டு வந்தபோது அவ்வீதியால் வந்த ஒரு பெண்மணி குறித்த மாணவியை அழைத்து வந்து பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து பெற்றோர் குறித்த மாணவியை அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று இன்று (16.05) பாடசாலையால் குறித்த மாணவியின் பெற்றோரை அழைத்து பாடசாலை பிரதி அதிபர் உரையாடியதாக தெரியவந்துள்ளது.

“பெற்றோரோடு நாம் கதைத்திருந்தோம். எனினும் சம்பவத்தை நாம் சரியாக பார்க்கவில்லை. பிள்ளையின் பாதுகாப்புக்காக பெற்றோருடன் கதைத்தோம்” என உப அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் பதியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட போது இச்சம்பவம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை எனவும் குறித்த பாடசாலை நிர்வாகத்துடன் கதைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பிள்ளை கடத்தல் தொடர்பில் பல இடங்களிலும் தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையிலும் வவுனியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்படவேண்டியதும், பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டியதும் கட்டாயமாகும். உரிய தரப்பினர் இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version