இலங்கையில் நேற்று மேலும் 13 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்றைய தினம் (16.05) கோவிட் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது பெய்து வரும் மழையினால் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் அதிகமாக பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தரவுகளின்படி இவ்வருடம் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 34,511 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.