39 பேருடன் மத்திய இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பல்!

39 பேருடன் சென்ற சீன மீன்பிடிக் கப்பல் மத்திய இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கப்பலில் 17 சீனர்கள், 17 இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் ஐந்து பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்கள் எவரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“Lu Peng Yuan Yu 028” என்று பெயரிடப்பட்டது மற்றும் Penglai Jinglu Fishery Co. நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த கப்பல், மத்திய இந்தியப் பெருங்கடலில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் கவிழ்ந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான கப்பலின் மீட்பு பணிகளுக்காக சீனா இரண்டு கப்பல்களை அனுப்பியுள்ளதுடன். மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version