முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய வேளையில் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குலுக்கு உதவிய சந்தேக நபர்களில் முக்கியமானவரான சிவலிங்கம் ஆரூரன் குறித்த சம்பவத்திலிருந்து போதிய ஆதரங்கள் இல்லை என கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
குறித்த சம்பவம் சந்தேக நபரினால் முன்னெடுக்கப்பட்ட விடயம் இல்லை எனவும், அதன் காரணமாக ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் கொழும்பு நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க தீர்ப்பில் கூறியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி பித்தளை சந்தியில் கோட்டாபய ராஜபக்ஷவை குறிவைத்து அவரது வாகன தொடரினி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரண்டு இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர். பாதுகாப்பு செயலாளர் காயங்களின்றி தப்பித்துக் கொண்டார்.