ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது.

மும்மதங்களை இழிவுபடுத்திய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று(17.05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயங்களை அவர் கூறியுள்ளார்.

அவர் நாட்டை விட்டு வெளியேறும் போது பயண தடை விதிக்கப்படவில்லை. நேற்று(16.05) குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பயணதடை உள்ள ஒருவர் நாடு திரும்பும் போது அவரை கைது செய்ய முடியுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சு சம்மந்தப்பட்ட வேலைகளுக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாகதவும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவேன்” எனவும் ஜெரோம் பெர்னான்டோ சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக, புதிய பௌத்த முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, போராட்டக்காரர்களின் ஒன்றியம் ஆகியன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளன.

“குற்றப்புலனாய்வு பிரிவினர் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துளள்னர். விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றத்துக்கு மனு தாக்கல் செய்து நீதிமன்ற கட்டளைகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் இடம்பெறும்” என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Social Share

Leave a Reply