சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள்!

நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்களை தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நேற்று (17.05) அறிவித்தல் விடுத்துள்ளது.

நாளாந்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் எண்னிக்கையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக
சுகாதர வழிமுறைகளை பின்பற்றுவது சிறந்தது என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலைகள் போன்ற பொது இடங்களில் கொவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ்கள் அதிகமாக பரவி வருவைத்தால், முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், பொதுக்கூட்டங்களைத் தவிர்த்தல் போன்ற கொவிட்-19 சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றி மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply