பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (18.05) இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் வரிக் கொள்கையினால் தொழில் வல்லுநர்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலின்போது ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயர்தர விடைத்தாள்களை சரிபார்க்கும் பணிகளில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், பரீட்சை திணைக்களம் எதிர்வரும் சில வாரங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிடும் என தமது சங்கமும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.