அதிக வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது, குறித்த அறிக்கை இன்று (18.05) பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டதுள்ளதுடன், நாளை (19.05) வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகரித்திருப்பதால் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிழலில் இருத்தல், வெளிக்கள வேலைகளை குறைத்துக்கொள்ள மற்றும் அதிக நீர் அருந்துதல் போன்ற செயற்பாடுகளை செய்யுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.