தென் கடலில் ஹெரோயின் கடத்தியவர்கள் கைது

இலங்கையின், தெற்கு பகுதியில் 125 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்ட அதேவேளை, ட்ரோலர் படகு ஒன்றும் இலங்கை பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப் பொருள் தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு, கடற்படை ஆகியன இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டவர்களும், சான்று பொருட்களும் இன்று(18.06) கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கைப்பற்றப்பட்ட படகு தினசரி மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் படகு என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply