கடவுச்சீட்டு பெற்றுக்கொடுப்பதற்கு தரகர்களாக செயற்பட்ட 9 பேர் கைது!

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அருகில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கிய 09 தரகர்களை, பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸின் உத்தரவின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வரிசையில் நிற்காமல் சிலர் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதாக கிடைத்த முறைப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சோதனையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவுத் திணைக்களத்திற்கு அருகில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொடுப்பதற்காக 25,000 ரூபா பணத்தையும் இவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் தொடரும் எனவும் மோசடியாளர்களுடன் இணைந்து செயற்படும் ஏனைய அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (18.05) முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் அனைவரும் உடனடியாக கட்டிட வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறைமையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version