தென் பசிபிக் பெருங்கடலில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது.
அதன்படி, பிராந்திய சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், பிஜி, வனுவாட்டு மற்றும் நியூ கலிடோனியாவிற்கு இடையே நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிலோமீட்டர் (621 மைல்) தொலைவில் உள்ள கடற்கரையோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 38 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை நியூசிலாந்து நாட்டிற்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தொடர்பில் நியூசிலாந்தின் தேசிய அவசரகால முகைத்துவ நிறுவனம் மதிப்பீடு செய்து வருவதாகத் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.