தனியார் பஸ்களுக்கு மட்டும் அபராதம் விதிப்பது நியாயமற்றது!

அதிக புகையை வெளியிவதாக தனியார் பஸ்களை மட்டும் மீண்டும் மீண்டும் பரிசோதித்து அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் நாடு பூராகவும் தனியார் பஸ் சேவைகளை நிறுத்தப்போவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) எச்சரித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தனியார் பஸ்களில் குறைபாடுகளை கண்டறிவதற்காக தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொண்டு வருவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இன்று (19.05) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதிக சத்தம், அமைப்பின் மாற்றங்கள், ஸ்டிக்கர்கள் போன்றவற்றுக்கு எதிரான நடவடிக்கையை சங்கம் எதிர்க்கவில்லை. எனினும், பொலிஸார் கடமையில் இருக்கும்போது பஸ்களை நிறுத்தி புகைப் பரிசோதனைகளை மேற்கொள்வதாக பஸ் உரிமையாளர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகன புகை பரிசோதனை சான்றிதழ்களை பெற்ற பின்னரே பேருந்துகளை மீண்டும் இயக்க அனுமதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், எவ்வாறாயினும், அதிக புகையை வெளியிடும் பேருந்துகளை மீண்டும் மீண்டும் சோதனை செய்து காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்படுவைத்து அனுமதிக்க முடியாத ஒன்று என் தெரிவித்துள்ளார்.

“அதிகப்படியான புகைக்குக் காரணம், அதிக அளவு கந்தகத்துடன் கூடிய ஆட்டோ டீசல் இறக்குமதியாகும். தரமான எரிபொருளை விநியோகித்தால், அதிகப்படியான புகை பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு தாம் எச்சரிக்கை விடுப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், அரசுப் பேருந்துகள் ஆய்வு செய்யப்படாமல் தனியார் பேருந்துகளை மட்டுமே அதிகாரிகள் புகைப் பரிசோதனைக்கு உட்படுத்துவது மிகவும் மோசமான விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply