ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் புதிய செயலியை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமுடன் ஒருங்கிணைக்கும் செயலியாக இதனை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த செயலியை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்வேறு பிரபலங்களை தொடர்பு கொண்டு இந்த செயலி தற்போது பயன்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.