43 மில்லியன் பெறுமதியான சுமார் 2 கிலோ கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்த முற்பட்ட உள்ளூர் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை (18.05) காலை கடுநாயக்க விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் விமானமான EK-650 மூலம் வருகை தந்துள்ளார்.
35 வயதுடைய குறித்த வர்த்தகர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர் என்றும் கொழும்பில் வசிப்பவர் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறையான விசாரணைகளைத் தொடர்ந்து,அவரது பயணப்பொதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.