இந்து, பௌத்தம், இஸ்லாம் மதங்களை இழிவு செய்து போதனை மேற்கொண்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இலங்கை திரும்பியதும் கைது செய்யப்படும் நிலையில் காணப்படுகிறார். இவ்வாறான நிலையில் நேற்று வெளிநாட்டிலிருந்து வீடியோ தொழில் நுட்பம் மூலமாக மேற்கொண்ட போதனையில் தான் மத சார்பான கருத்துக்களை முன்வைத்து நடாத்திய போதனைகள் மூலம் பௌத்த, இந்து, இஸ்லாம் மதங்களை சேர்ந்தவர்களுக்கு மனவுடைவு ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.
கொழும்பு, மிரிஹானையில்(21.05) நடைபெற்ற இந்த போதனையில், தான் போதித்தமைக்காக மன்னிப்பு கோரவில்லை எனவும், அதன் மூலம் ஏனைய மதத்தவர்களின் மனம் பாதிக்கப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதாகவே கூறியுள்ளார்.
“நான் செய்திகளை போதனை செய்கிறேன். பைபிளில் உள்ளதனையே நான் போதனை செய்கிறேன். நான் எந்த பிழையும் செய்யவில்லை. ஆனாலும் என்னுடைய வார்த்தைகள் உங்களுடைய மனங்களை புண்படுத்தியிருந்தால் பௌத்த, இந்து, இஸ்லாம் சகோதர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். இலங்கையில் உள்ள பௌத்த மதகுருமார்களிடம் நான் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் நாடு திரும்பி போதனையில் பங்குபற்றுவேன் என ஏற்கனவே என சமூக ஊடகம் மூலமாக கருத்து வெளியிட்டிருந்த ஜெரோம் பெர்னாடோ, அமைச்சு வேலைகளுக்கு வெளிநாடு சென்றுள்ளதாகவும் கூறியிருந்தார். இருப்பினும் சிங்கப்பூரில் போதனைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அத்தோடு இலங்கைக்கு திரும்புவது தொடர்பில் எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்தி