Yahoo Finance இணையத்தளத்தின் கூற்று படி, ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தரவரிசை 2021 இன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கை 17வது இடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தரவரிசையில் முதலாவது இடத்தில் வட கொரியாவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானும் 20வது இடத்தை மொங்கோலியா தேசமும் பிடித்துள்ளன.