பணிப்பெண் ராஜகுமாரி மரணம் தொடர்பில் மனோ, அரசு தரப்புடன் கடும் வாக்குவாதம்!

பிரபல கலைஞர் சுதர்மா ஜயவர்தன வீட்டில் பணி செய்த பதுளையை சேர்ந்த ராஜ்குமாரியின், சடலத்தை மீண்டும் வெளியெடுத்து, மறு பிரேத பரிசீலனைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், அந்த பரிசீலனையை பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படையுங்கள் என்றும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்

மனோ கணேசன் இன்று சபையில் வாதிட்டார்.

இவ்வேளையில் அரசு தரப்பினர் கூச்சல் எழுப்பி மனோ எம்பியை பேச விடாமல் தடுத்தனர்.

இந்நிலையில் மனோ எம்பிக்கு ஆதரவாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, எம்பி விமல் வீரவன்ச ஆகியோர் வாதிட்டனர்.

இறுதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன எழுந்து, மனோ எம்பியின் கோரிக்கையின்படி மறு பிரேத பரிசீலனையை நடத்த நீதிமன்றத்தை நாடும்படி பொலிஸ் திணைக்களத்தை பணிப்பதாக உறுதியளித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version