யாழில் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்யும் போது அவர்கள் பயன்படுத்திய பின்னர் எஞ்சியிருந்த ஹெரோயின் மற்றும் அதனை பயன்படுத்த உபயோகிக்கும் சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அனைவரும் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்தி இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவன் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்பவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version