இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷா பதிரனவின் குடும்பத்துடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இப்புகைப்படத்தை மதீஷா பதிரனாவின் சகோதரி விஷுகா பதிரன தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், ‘மதீஷா இப்போது என்னுடைய கைகளில் இருக்கிறார். அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எப்போதும் அவருடன் நான் இருப்பேன்’ என தல தோனி எங்களிடம் கூறினார் என பதிவிட்டுள்ளார்.
