பருவநிலை மாற்றத்தால் அண்டார்டிகாவில் பாரிய சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்த ஆய்வுகள் தொடர்பான விசேட அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் இந்த விடையம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின் மூலம், அண்டார்டிகாவில் தண்ணீருக்கு அடியில் ஏற்படும் நில நடுக்கத்தால் பூமியின் வலது புறத்தில் உள்ள கடலில் பாரிய சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதன் அளவு மற்றும் பாரதூரம் குறித்த உறுதியான தகவல் இல்லை எனினும், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான ஒரு சுனாமி ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதரங்களின்படி, இந்த சுனாமி அலைகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து முதல் தென்கிழக்கு ஆசியா வரை பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கைகளை கண்டறியும் தொழில்நுட்பம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் குறித்த ஆய்வுடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.