தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வியாழக்கிழமை (25.05) இரவு டுபாய் சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர் அன்றையதினம் இரவு 8 மணியளவில் ஃப்ளை துபாய் விமானத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறினார் எனவும் இந்த பயணத்திற்கான நோக்கம் இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (23.05) ஃப்ளை துபாய் விமானத்தில் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர் ஓய்வறையில் வைத்து 3.5 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட்போன்களுடன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அபராதம் விதிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்துடன், 7.5 மில்லியன் பெறுமதியான பொருட்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.