தனியார் பல்கலைக்கழக கல்விக்கு வட்டியில்லாக் கடனுதவி வழங்குவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்லவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் வழங்கப்படவுள்ள வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு ரூ.900,000 வட்டியில்லா கடன் கிடைக்கும் எனவும், நாளாந்த கல்வி செலவுக்காக ரூ.300,000 பெற்றுக்கொள்ள முடியும் எனவும், படிப்பு முடிந்ததும், இந்தக் கடனை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.