பதுளை பணிப்பெண் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு இடமாற்றம்!

வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரி பொலிஸ் களப் படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பிலேயே இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னர் மற்றுமொரு பொலிஸ் இன்ஸ்பெக்டர், இரண்டு சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

குறித்த பெண் பொலிசாரின் தாக்குதலினாலேயே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் உள்ளக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version